காவலர் குடியிருப்பில் வசிக்கும் 24 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் இவருடைய தந்தை, கரோனா பரிசோதனை செய்துகொண்டதையடுத்து இவரும் கடந்த 15ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், நேற்று இரவு இவரின் வீட்டிற்கு வந்த சுகாதாரத்துறை அலுவலர்கள், இவருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது, இவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கரோனா பரிசோதனையை மருத்துவக் குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.