இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஏப்ரல் 20ஆம் தேதி அன்று வெளியிட்ட அரசாணை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.
அந்த அரசாணையின் மீது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கக் காலத்தில், பள்ளி மாணவர்களிடம் 2019-20ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம், 2020-21ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.