சென்னை:தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், ஆரம்ப வகுப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவசம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-22ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை rte.tnschools.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
பெற்றோரிடம் ஆர்வம் குறைவு
இத்திட்டத்தின்கீழ் 1,07,992 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. ஆனால், கரோனா தொற்றின் காரணமாக, நடப்புக் கல்வியாண்டில் எல்கேஜி வகுப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோரிடம் ஆர்வம் குறைவாக உள்ளது.
இதனால் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ், மாணவர்களை சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி வரையில் 73 ஆயிரத்து 86 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: சென்னை எங்கே?