தமிழ்நாட்டில் மெட்ரிகுலேசன் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் அரசின் அறிவிப்பை மீறி ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா (தீநுண்மி) பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளார். மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.