தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக் குழு தலைவராக பாலசுப்பிரமணியம் ஜூலை 1ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்யும் பணியினை அவர் தொடங்கியுள்ளார்.
கட்டணம் நிர்ணயிக்க தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்!
09:27 July 17
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், கட்டண நிர்ணயம் செய்வதற்குரிய விண்ணப்பங்களை வரும் 20ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்து அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் தங்களுக்குரிய கல்விக் கட்டணத்தை 2020 -21, 2021 -22 , 2022 -23ஆம் ஆண்டிற்கு நிர்ணயம் செய்வதற்குரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாது. தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் tnfeecommittee.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகள் நேரடியாக விண்ணப்பங்களை கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'இறுதித் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவு': அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?