சென்னை: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் சேர்வதற்கான கால அவகாசம் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 07 ஆயிரத்து 984 இடங்களுக்கு, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின்கீழ் 82 ஆயிரத்து 766 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
குலுக்கல் முறையில் தேர்வு
இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும்; மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பள்ளியில் உள்ள இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் வரும் 19ஆம் தேதி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.
மொத்த இடங்களைவிட குறைவாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளிலும்; அதே நாளன்று மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கு முன்னதாக தகுதி வாய்ந்த மாணவர்கள், தகுதி இல்லாத மாணவர்களின் விவரங்கள் 18ஆம் தேதியே வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 2 லட்சத்து 13 ஆயிரத்து 368 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 602 விண்ணப்பங்கள் குறைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்