தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுப்பிக்கப்படாமல் இருக்கும் தனியார் நில ஆவணங்கள்: சிஏஜி அறிக்கை

தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களின் விவரங்கள் நில ஆவணங்களில் புதுப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏஜி அறிக்கை
சிஏஜி அறிக்கை

By

Published : Jan 14, 2023, 10:10 AM IST

சென்னை:இதுகுறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை கீழ்வருமாறு:

  • தணிக்கை செய்யப்பட்ட மாதிரி கிராமங்களுள், 61 விழுக்காடு கிராமங்களில், கைமுறையாக (Manual) பராமரிக்கப்பட்ட மற்றும் கணினிமயமாக்கப்பட்ட அ-பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன.
  • மென்பொருள் செயலியில் சரிபார்ப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் பழைய புல எண்களை உள்ளிடுவதிலும் எண்மாணம் விதிகளின்படி உட்பிரிவு எண்களை அளிப்பதிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன.
  • கணினி மயமாக்கப்பட்ட நில ஆவணங்களில் 3.22 இலட்சம் தனியார் நிலங்கள் அரசு நிலம் என்று தவறாக வகைப்படுத்தப்பட்டது. இதனால், தனியார் நில உரிமையாளர்கள் இன்னல்களை சந்தித்தனர்.
  • ஒரே நில உரிமையாளருக்குப் பல பட்டா எண்கள் அளிக்கப்பட்ட நேர்வுகளாலும் தேவையற்ற பட்டா எண்கள் உள்ளமையாலும் இணைய வழி பட்டா மாறுதல்கள் செய்யும் பணித்தொடரில் பாதிப்பு மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டன.
  • புல அளவீட்டு வரைப்படங்களின் (Field Measurement Sketches - FMS) கணினிமயமாக்கல் முழுமையடையவில்லை. மின் அ-பதிவேட்டில் உள்ள 23.25 இலட்சம் உட்பிரிவுகளை FMS தரவுதளத்துடன் ஒப்பிடும்போது, 6.25 இலட்சம் உட்பிரிவுகளுக்கான உள்ளீடுகள் FMS தரவுதளத்தில் இல்லை என்று கண்டறியப்பட்டது. இது குடிமக்களுக்கு சேவை வழங்குதலில் பாதிப்பு தகவல்களிலும் FMS தரவுகளை கணினிமயமாக்கப்பட்ட அ-பதிவேட்டுடன் ஒப்பீடும்போது பிழைகள் இருந்தன.
  • மார்ச் 2021 நிலவரப்படி, கணினிமயமாக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட 1.42 கோடி நத்தம் நிலப் பதிவேடுகள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் இணைய வழியில் கொண்டு வரப்படவில்லை. மேலும் இப்பதிவேடுகளில் குறைபாடுகளும் உள்ளன. 2017ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இ-அடங்கல் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
  • மாதிரி வட்டங்களில் இணைய வழி பட்டா மாறுதல்கள் செயலியில் மூலம் பெற்ற "உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் மனுக்கள் தாமதமாக அனுமதிக்கப்படுதல், தாமதமாக நிராகரிக்கப்படுதல் மற்றும் தாமதமாக செயலாக்குதல் முறையே 43 விழுக்காடு, 79 விழுக்காடு, மற்றும் 60 விழுக்காடு ஆக இருந்தது. இதேபோல், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் மனுக்களை அனுமதிப்பதிலும், நிராகரிப்பதிலும், செயலாக்குதலிலும் முறையே 53 விழுக்காடு, 93 விழுக்காடு, மற்றும் 73 விழுக்காடு மனுக்களில் காலதாமதம் இருந்தது கண்டறியப்பட்டது.
  • பதிவு மற்றும் வருவாய் துறைகளுக்கு இடையே தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்ட போதிலும், 49 விழுக்காடு உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக நில உரிமையாளர்களுக்கு தாமதம் மற்றும் சிரமம் ஏற்பட்டது. பட்டா மாற்றம் கோரும் உட்பிரிவு அல்லாத மற்றும் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கான இணையவழி மனுக்கள் அனுமதிப்பதிலும், நிராகரிப்பதிலும் மற்றும் செயலாக்கத்திலும் தாமதங்கள் கண்டறியப்பட்டன.
  • மாதிரி பட்டா மாற்றுதல் விண்ணப்பங்களை கைமுறையாக ஆய்வு செய்ததில், 66 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு தவறாக ஒப்புதல் அளிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதேபோல், 86 விழுக்காடு விண்ணப்பங்கள் தவறாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
  • மேற்கொள்ளப்பட்ட மறு அளவைப் பணிகள் தற்போதைய நிலையில் முழுமையடையாமல், 'நிலத்தீர்வை' இறுதிக் கட்டத்தை எட்ட முடியவில்லை. மூன்று மாதிரி வட்டங்களில், 13 முதல் 19 ஆண்டுகளுக்கு முன்பே நகர அளவைப்பணி துவங்கப்பட்ட போதிலும், 'நிலத்தீர்வை' செயல்முறை இன்னும் நடந்து வருகிறது.
  • 33.91 கோடி செலவு செய்த பிறகும் 22 மாதிரி வட்டங்களுள் 15ல் நில ஆவண மேலாண்மை மையங்கள் (Land Record Management Centre - LRMC) பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் உடையதாக இல்லை.
  • அனைத்து மட்டங்களிலும் சுண்காணிப்பில் குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக, மூன்று மாதிரி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ஒரு முறை கூட கூடவில்லை.

ABOUT THE AUTHOR

...view details