தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த தனியார் மருத்துவமனை..! - case on hospital

வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக மருத்துவமனை மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனை மீது புகார்  அறுவை சிகிச்சை  வயிற்றில் பஞ்சு வைத்து அறுவை சிகிச்சை  வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த தனியார் மருத்துவமனை  மருத்துவமனை மீது புகார்  தனியார் மருத்துவமனை மனை மீது புகார்  surgery issue  private hospital  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  stitched with cotton in the abdomen  case on hospital  Private hospital stitched with cotton in the abdomen
வயிற்றில் பஞ்சு

By

Published : Aug 9, 2021, 10:43 PM IST

சென்னை:வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த நீலவேணி (46), அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலவேணிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

இதனையடுத்து நீலவேணி பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு நீலவேணியை பரிசோதித்த மருத்துவர்கள், கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் அதை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை

இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நீலவேணி, மருத்துவமனையில் கட்டி நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். செப்டம்பர் 7 தேதி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நீலவேணிக்கு ஒரிரு தினங்களில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.

உடனே நீலவேணி மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் அதில் எந்தப் பயனும் இல்லை. உடனே நீலவேணி இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது அவர்கள் முறையாக பதில் எதும் சொல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நீலவேணி உயிருக்கு பயந்து ஆந்திர மாநிலம் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு நீலவேணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ இருப்பதாக தெரிவித்தனர்.

வயிற்றில் பஞ்சு

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நீலவேணிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கபட்டது தெரியவந்தது.

முன்னதாக கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில், தெரியாமல் பஞ்சு வைத்து தைத்துள்ளதாக நீலவேணியிடம் மருத்துவர்கள் தெரிவித்ததுடன், பஞ்சு அகற்றிய வீடியோ பதிவையும் கொடுத்தனர்.

வயிற்றில் பஞ்சு...

பின்னர் நீலவேணி இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று கேட்ட போது அவர்கள் எந்தவித பதிலும் சொல்லாமல் விரட்டி அடித்தனர்.

மருத்துவமனை மீது புகார்

பின்னர் பாதிக்கப்பட்ட நீலவேணி தவறான சிகிச்சை செய்த மருத்துவமனை, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீலவேணி இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீலவேணி, தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம், மற்றும் மருத்துவர்கள் மீது காவல் துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டு கொண்டார்.

இதையும் படிங்க: புனே: நான்காம் மாடி ஜன்னலில் தொங்கிய சிறுமி மீட்பு

ABOUT THE AUTHOR

...view details