மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் தனியார் மருத்துவமனைகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று (கோவிட் 19) பரவி வருவதால், பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. எனவே கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மருத்துவச் சேவையைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.
டயாலிஸ், கீமோதெரபி உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்குத் தொடர்ந்து அளிக்க வேண்டிய சிகிச்சைகள், நரம்பியல் தொடர்பான சிகிச்சைகள் உள்ளிட்டவையைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.