சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 55 வயதான அன்பழகன், கரோனா தொற்று காரணமாக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது சிகிச்சைக்காக முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை உறவினர்கள் கட்டியுள்ளனர். இதனையடுத்து, கடந்த வாரங்களில் மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளனர்.
கரோனா உயிரிழப்பு - உடலை ஒப்படைக்க அதிக பணம் கேட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் - protest at private hospital at thiruvotriyur
சென்னை : கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைக்க அதிக பணம் கேட்ட தனியார் மருத்துவமனையை, இறந்தவரின் உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று இரவு அன்பழகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், 20 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு ஏழு லட்ச ரூபாய் மீதி பணம் கட்டினால் மட்டுமே உடலை ஒப்படைக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம், வேறு வழியின்றி உயிரிழந்தவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் காசிமேடு மயானத்திற்கு அனுப்பி வைத்து அடக்கம் செய்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
TAGGED:
chennai corona virus