சென்னை: சென்னை மெட்ரோ ரயில்கள் பராமரிப்பது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-இல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரயில்களைப் பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம் (PPIO) மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ.21.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பு கடிதம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு கடந்த நவ.9 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் - மெட்ரோ திட்டம் ஜி.வீராகுமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.