தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு - அரசு பதிலளிக்க உத்தரவு

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ? ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது? என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

By

Published : Apr 25, 2020, 11:14 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கால் பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் முறையான வருமானமில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்கம் செய்வதாகவும், ஊதியத்தை பிடித்தம் செய்வதாகவும் கூறப்படுகின்றன.

இந்நிலையில் தனியார் நிறுவன ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், அவர்களின் மாத ஊதியத்தை நிறுத்தம் செய்யக் கூடாது என்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அருண் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், ஊரடங்கு நீட்டிப்பின்போது பிரதமர் வெளியிட்ட அறிவிப்பிலும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது, ஊதியத்தை நிறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் பணிநீக்கம் போன்ற செயல்கள் ஊழியர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் தருவதாகும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமையும், பணிபுரிவதற்கான உரிமையையும் பறிக்கும் வகையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் மத்திய அரசை சேர்த்ததுடன், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் மே 21ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details