தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கல்பட்டிலிருந்து மது பாட்டில்கள் கடத்திய தனியார் தொலைக்காட்சி எடிட்டர்! - தனியார் தொலைக்காட்சி எடிட்டர்

சென்னை: செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்திய தனியார் தொலைக்காட்சி எடிட்டர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Liquor ceased  சென்னை செய்திகள் ‘  தனியார் தொலைக்காட்சி எடிட்டர்  மதுபானக் கடத்தல்
சட்டவிரோதமாக மதுபான பாட்டில் கடத்திய தனியார் தொலைக்காட்சி எடிட்டர்

By

Published : May 7, 2020, 3:35 PM IST

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் போதைக்கு அடிமையான சிலர் வார்னிஷ், சானிடைசர் ஆகியவற்றை குடித்த சம்பவமும் அரங்கேறி வந்தன. சிலர் ஒரு படி மேலே போய் கள்ளச்சாராயம் காய்ச்சி காவல் துறையிடம் சிக்கினர்.

இச்சூழலில், சென்னையைத் தவிர பல இடங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்று மதுபானம் வாங்க தடை விதிக்கப்பட்டது.

புறநகர்ப் பகுதிகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வருபவர்களைப் பிடிக்க புறநகர் சோதனைச் சாவடிகளில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, செம்மெஞ்சேரி பகுதி சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர்.

அவர்களது பைகளில் இருந்து பத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களில் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் எடிட்டராக பணிபுரிந்து வருவதும், அவர்கள் செங்கல்பட்டு பகுதியிலிருந்து மதுபானம் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சட்டவிரோதமாக பதுக்கியிருந்த 2,160 மதுபாட்டில்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details