தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி?

சென்னை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சிசெய்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Private Candidates all are all pass Directorate Of Government Examinations, Tamil Nadu
Private Candidates all are all pass Directorate Of Government Examinations, Tamil Nadu

By

Published : Jun 26, 2020, 11:55 AM IST

கரோனா காரணமாக, பள்ளிகளில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் 9.75 லட்சம் பேர் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டிருப்பதால், தனித்தேர்வு மாணவர்களையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள 30 ஆயிரம் தனித்தேர்வு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க...'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details