தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.. 6 பேர் இன்று விடுதலை... - உச்சநீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான ஆறு பேரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajiv gandhi case  Rajiv gandhi murder case  prison department  six life prisoners  life prisoners in the Rajiv gandhi murder case  Rajiv Gandhi assassination case  life prisoners released  prisoners  life prisoners  Rajiv Gandhi  ராஜீவ் காந்தி  ராஜீவ் காந்தி கொலை  ராஜீவ் காந்தி கொலை வழக்கு  சிறைத்துறை  6 பேர் விடுதலை  ஆயுள் தண்டனை  உச்சநீதிமன்றம்  மின் அஞ்சல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு

By

Published : Nov 12, 2022, 7:15 AM IST

Updated : Nov 12, 2022, 7:25 AM IST

சென்னை:முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வந்த நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து நேற்று (நவம்பர் 11) தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனை கைதிகளான ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிரத்தியேகமான சட்டப் பிரிவான 142 பயன்படுத்தி விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து அதே சட்டப்பிரிவை பயன்படுத்தி தங்களையும் விடுதலை செய்யக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் நேற்று (நவம்பர் 11) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினியும், தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிசந்திரனும் தற்போது பரோலில் உள்ளனர். சாந்தன், முருகன் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் உள்ளனர். ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது மின் அஞ்சல் (E Mail) மூலமாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும். அந்த தீர்ப்பை பெற்றுக்கொண்டு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்வார்கள். ஆனால் நேற்று இரவு எட்டு மணிக்கு மேலாகியும் தீர்ப்பின் நகல் மின் அஞ்சல் மூலம் வராததால் இன்று (நவம்பர் 12) அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிறைத்துறை விதிகளின்படி ஆறு மணிக்கு மேல் கைதிகள் யாரையும் விடுதலை செய்வதில்லை என கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மின் அஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட சிறைச்சாலைகளுக்கு வந்த உடன் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை யாரிடம் ஒப்படைப்பது அல்லது எங்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது குறித்து சிறைத்துறை நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்படி அவர்கள் வெளிநாட்டவர்கள் தங்கி இருக்கக்கூடிய முகாம் அல்லது அவர்களுக்கு யாராவது பொறுப்பு ஏற்றுக்கொண்டால் அதற்கான உறுதிமொழி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த அரசு உத்தரவு வந்தவுடன் புழல் சிறையில் இருக்கக்கூடிய ராபர்ட் பயஸ்ம், ஜெயக்குமாரும் விடுதலை செய்யப்படுவார்கள் என புழல் சிறைத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’இதற்குத் தான் தவிப்போடு காத்துக் கிடந்தோம்..!’ - ஆறு பேர் விடுதலை குறித்து பேரறிவாளன்

Last Updated : Nov 12, 2022, 7:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details