தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்களுக்கு முன்னுரிமை - அமைச்சர்

மற்ற பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் வரும் போது சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் - அமைச்சர்
சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் - அமைச்சர்

By

Published : May 10, 2022, 10:03 PM IST

Updated : May 10, 2022, 10:14 PM IST

சென்னை:சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது “ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் மே மாதத்திற்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக் கழகமாக இருந்தபோது அதிகமாக ஆட்களை நியமனம் செய்து விட்டார்கள். அரசு பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்ட பிறகு இதுபோன்ற பணியமர்வு குறித்த பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. மே மாதத்திற்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம் என்று தொகுப்பூதிய ஊழியர்களுக்கு எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. மற்ற பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள் வரும்போது சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Last Updated : May 10, 2022, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details