தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி பேசியதென்ன? - காணொளி மூலம் ஆஜரான

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை வரும் ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 28, 2023, 4:43 PM IST

சென்னை: சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 28) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது (ED Arrest Minister Senthil Balaji) செய்தனர். உடல் நலக்குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை (Senthil balaji heartsurgery) நடத்தப்பட்டது.

இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் இன்று (ஜூன் 28) முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

காணொலி காட்சியில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம், எப்படி இருக்கிறீர்கள்? என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு லேசான வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதிலளித்தார். தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதி அல்லி, விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details