தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

NEET Exemption Bill: 'குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடரும்' - இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதா

தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வல்லுநர் குழு அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதனை ஆய்வு செய்து, சட்ட முன் வடிவைத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ஆளுநர் NEET Exemption Bill காலம் தாழ்த்துவது மக்களாட்சி மாண்புகளுக்கு உகந்ததாகாது என பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடரும் என பிரின்ஸ் கஜேந்திரபாபு
நீட் விலக்கு மசோதாக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடரும் என பிரின்ஸ் கஜேந்திரபாபு

By

Published : Dec 28, 2021, 10:47 PM IST

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த NEET Exemption Bill சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் விரைந்து அனுப்பிட வேண்டும், இல்லையெனில் உண்ணாநிலை அறப்போராட்டம் வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளிலும், தமிழ்நாடு அரசுக்குரிய மாணவர் சேர்க்கை இடங்களிலும், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த சட்ட முன் வடிவைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021 செப்டம்பரில் அனுப்பி உள்ளது.

சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா

ஆளுநரின் மௌனம் - மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது

ஆனால், மூன்று மாதங்கள் முடிந்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது. 18 வயதிற்கு உள்பட்ட குழந்தைப் பருவம் நிறைவுறாதவர்களே மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவு குறித்த ஆளுநரின் மௌனம் மாணவர்களையும் பெற்றோர்களையும் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடரும்

நிறைவேற்றப் பட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் அனுப்பப்பட்டால், அதற்கு ஒப்புதல் அளிப்பது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது அல்லது தமது கருத்துடன் மீண்டும் சட்டப் பேரவை பரிசீலனைக்கு அனுப்புவது ஆகியனவற்றில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை எவ்வளவு விரைவாக இயலுமோ, அவ்வளவு விரைவாக ஆளுநர் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 கூறுகிறது.

மக்களாட்சி மாண்புகளுக்கு உகந்ததாகாது

தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வல்லுநர் குழு அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று, அதனை ஆய்வு செய்து, சட்ட முன் வடிவைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ஆளுநர் காலம் தாழ்த்துவது மக்களாட்சி மாண்புகளுக்கு உகந்ததாகாது.

நீட் தேர்வு விலக்கு

தேசிய தேர்வு முகமை தரும் மதிப்பீட்டுச் சான்றே மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதியாகக் கொள்ளப்படும் என்பது, பொது நியதிக்கு முரண்பட்டது. கல்வியியல் செயல்பாட்டிற்கு எதிரானது. மாணவர்களை மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கிறது.

சமூக நீதிக்கு எதிரானது

தமிழ் நாட்டில் தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டணமில்லாமல், கற்பதை ஊக்குவிப்பதற்காக உதவித் தொகை, கல்விக் கருவிகள் என அனைத்தையும் வழங்கித் தரமான கல்வியை அரசு வழங்கிவரும் நிலையில் இதற்கு மதிப்பளிக்காமல் தனியார் நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துப் பயிற்சி மேற்கொண்டு எழுதும் தேர்வுக்கு மதிப்பளிப்பது சமூக நீதிக்கு எதிரானது.

நீட் தேர்வு விலக்கு

மாநிலத்தின் தேவை, மாணவர்களின் நலன், அரசமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் 'தமிழ்நாடு மருத்துவ இளங்கலைப் படிப்புச் சேர்க்கைக்கான சட்டம் 2021'ஐ ( Tamil Nadu Admission to Under Graduate Medical Degree Courses Act 2021 ) நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் விரைந்து அனுப்பிட வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடரும்

ஒப்புதல் கிடைக்கும் வரை உண்ணாநிலை தொடரும்

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2022 ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது எனவும், மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30 அன்று உண்ணாநிலை அறப்போராட்டம் நிகழ்த்துவது எனவும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை அந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!

நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details