சென்னை:பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை (ஏப்ரல் 8) சென்னை வருகிறார். பிற்பகலில் சென்னை வரும் அவர், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதை முன்னிட்டு சென்னை, தாம்பரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* நாளை பிற்பகல் பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது.
* GST சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநீர்மலை மேம்பாலம் வழியாக 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ செல்லலாம்.
* GST சாலை பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி, வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம்.