தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் மருந்தகங்கள் குறித்து பிரதமர் உரை: தமிழ்நாடு புறக்கணிப்பு - தமிழ்நாட்டை புறக்கணித்த மோடி

நாடு முழுவதும் மக்கள் மருந்தகத்தின் மூலம் பயனடைந்த பயனாளர்கள், மருந்தக உரிமையாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள்
தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள்

By

Published : Mar 7, 2022, 11:00 PM IST

சென்னை: மத்திய அரசின் ஜன் ஒளஷாதி திவாஸ் திட்டம் மூலம் நாடு முழுவதும் மக்கள் மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சென்னை - வண்ணாரப்பேட்டையில் இந்த மக்கள் மருந்தகத்தின் மூலம் பயனடைந்த பயனாளர்கள், மருந்தக உரிமையாளர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டை புறக்கணித்த மோடி

இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு மக்கள் மருந்தக பயனாளர்களும், கடை உரிமையாளர்களும் அரங்கில் குவிந்தனர். மேலும், மோடியிடம் தங்களின் கருத்துகளை தெரிவிக்க அவர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.

தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள்

மக்கள் மருந்தகங்கள் குறித்து உரை

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா, ஒடிசா, குஜராத், பீகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் பயனாளர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆனால், தமிழ்நாட்டை புறக்கணித்து விட்டு பிரதமர் மோடி உரையாற்றியதால், அங்கிருந்த தமிழ்நாடு பயனாளர்கள் மிகுந்த அதிருப்தியடைந்தனர்.

இதையும் படிங்க:உக்ரைன் அதிபருடன் மோடி தொலைபேசியில் உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details