தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

44th Chess Olympiad - ராம்ராஜின் 'தம்பி' வேட்டியை அணிந்திருந்த பிரதமர் மோடி - ஓ இதுதான் அந்த காரணமா! - பிரதமர் மோடி

சென்னையில் நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய அறிமுகமான தம்பி வேட்டியை அணிந்திருந்தார்.

ராம்ராஜின் 'தம்பி' வேட்டியை அணிந்திருந்த பிரதமர் மோடி
ராம்ராஜின் 'தம்பி' வேட்டியை அணிந்திருந்த பிரதமர் மோடி

By

Published : Jul 29, 2022, 4:09 PM IST

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன், தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.

செஸ் விளையாட்டிற்கும் “தம்பி” என்ற அடையாள உருவத்திற்கும் ராம்ராஜ் செய்யும் கௌரவம். பிரீமியம் வேஷ்டியான இது, இந்தியாவில் தோன்றிய செஸ் விளையாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் விதமாக கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை அணிபவர்களின் தோற்றத்தையும் அழகையும் எடுத்துக்காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய “தம்பி வேஷ்டிகள்” வழக்கமான கலர் மற்றும் பாணியில் இல்லாமல் அற்புதமான கருப்பு வெள்ளை கட்டம் போட்ட பார்டரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ராம்ராஜின் 'தம்பி' வேட்டி அறிமுகம்

இந்நிலையில், நேற்று (ஜூலை 28) நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டியை அணிந்திருந்தது கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்டில் இன்று: பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த கருப்பு காய்களுடன் களமிறங்கும் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details