சென்னை:ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீ வெள்ள பிரசாத் முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், சட்டப்பேரவை உறுப்பினர் பழனி நாடார், ஹசன் மௌலானா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக "அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்- கையோடு கைகோர்ப்போம்" என்ற நிகழ்விற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி உடைய மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜனவரி 26ஆம் தேதி அன்று "அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் - கையோடு கைகோர்ப்போம்" என்ற பரப்புரை இயக்கம் 2 மாதகாலம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பொதுக்கூட்டம் நடத்த திட்டம் என்றும்; மாநில அளவில் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்த வேண்டும் எனவும்; ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் குறித்த காணொலியை கிராமம்தோறும் திரையிடுவது குறித்தும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, "சட்டமன்றத் தொகுதிக்கு 100 காங்கிரஸ் கொடி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23,400 காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்பட உள்ளன. வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.