சென்னை:திருநெல்வேலி மாவட்டத்தில் கைகளில் சாதி கயிறு கட்டியதால் ஏற்பட்ட தகராறில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடம் தற்போது வன்முறை அதிகரித்து வருகிறது. கைகளில் சாதியை அடையாளப்படுத்தி கட்டப்படும் கயிற்றால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள உத்தரவில், “2019ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் போதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் பொழுதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது.