தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாதார மந்த நிலை  - வேலையில்லாத நாட்களை அறிவித்த பிரிக்கால் நிறுவனம்!

சென்னை: ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான பிரிக்கால் தனது உற்பத்தியைக் குறைக்கும் வகையில் வேலையில்லாத நாட்களை அறிவித்துள்ளது.

pricol plan to reduce the manufacturing

By

Published : Oct 10, 2019, 11:05 PM IST

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிக்கால் நிறுவனம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தால் சந்தையில் உதிரி பாகங்களில் விற்பனை குறைந்து வருகிறது. அதற்கேற்ப பிரிக்கால் நிறுவனம், தங்களது உற்பத்தியைக் குறைக்கும் வகையில் தொடர் வேலையில்லாத நாட்களை அறிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் மாதத்தில், கோவையில் உள்ள முதல் தொழிற்சாலையில் மூன்று நாட்கள் வரையும், மற்ற இரண்டு தொழிற்சாலைகளில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையும் வேலையில்லாத நாட்களாக இருக்கும் என அறிவித்துள்ளது.

அதேபோல் ஹரியான மாநிலம் குர்கானில் உள்ள தொழிற்சாலையில் ஒரு நாளும், புனேவில் மூன்று நாட்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் மூன்று நாட்களும் வேலையில்லாத நாட்களாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த தகவலையடுத்து பிரிக்கால் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது. அதன்படி இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையில் பிரிக்கால் நிறுவனத்தின் பங்குகள் 1.70 ரூபாய் வரை குறைந்து வர்த்தகமாகியுள்ளது.

இதையும் படிங்க:'2 பாம்புகள், 16 மரப்பல்லிகள், உடும்புகள்' - பயணி கூடையைத் திறந்து அதிர்ந்த சுங்கத்துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details