தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: குறைந்தது சிலிண்டர் விலை! - வீட்டு உபயோக சமையல் ஏரிவாயு

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 65 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

LPG cylinders
LPG cylinders

By

Published : Apr 1, 2020, 2:08 PM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரசைக் கட்டுப்படுத்த உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் அதிகளவில் இயங்காததால் எரிவாயுவிற்கான தேவை அதிகளவில் குறைந்துள்ளது.

ரஷ்யா, சவுதி போன்ற நாடுகளுக்கிடையே கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கடும் போட்டி நிலவுவதால் கடந்த 20 ஆண்டிற்கு இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.

இதன்காரணமாக, சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்து தற்போது 761 ரூபாய் 50 காசுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.

இதன் காரணமாக:கரோனாவைக் கட்டுப்படுத்த ரஷ்ய தலைநகர் முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details