சென்னை:தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனிடையே குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கூட்டணி கட்சி மற்றும் முக்கிய தலைவர்களை யஷ்வந்த் சின்ஹா, சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.
இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் யஷ்வந்த் சின்ஹா காரில் புறப்பட்டுச் சென்றார்.