தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது' - மா.சுப்பிரமணியன் - குடியரசுத் தலைவர் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார்

நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் அடித்தட்டு மக்களில் இருந்து வந்துள்ளதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார் - மா.சுப்பிரமணியன்
குடியரசுத் தலைவர் அடித்தட்டு மக்களில் இருந்து வந்துள்ளதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார் - மா.சுப்பிரமணியன்

By

Published : Jul 22, 2022, 10:54 PM IST

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு சட்ட மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவில் எழுத்துப்பூர்வமாக சில விளக்கங்களை ஒன்றிய அரசு கேட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா குடும்ப நலத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அலுவலர்களின் குறிப்புகளுடன் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கடந்த ஐந்தாம் தேதி தமிழக சட்டத்துறைக்கு கடிதம் வந்துள்ளது. நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவில் எழுப்பப்பட்ட ஆறு கேள்விகளுக்கும் சட்டத்துறை வல்லுனர்கள் மூலம் பதில்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்ற மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீதிமன்றங்களில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாநில தேர்வு துறையில் நடத்தப்படும் தேர்வின் மூலம் பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவதால் அதுவே தகுதியாக எடுத்துக் கொள்ளலாம். தேசிய கல்விக் கொள்கையினை இந்த மசோதா எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் நாட்டின் இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டிற்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது உள்ளிட்ட பதில்களை ஒன்றிய அரசிற்கு அளிக்க உள்ளோம்.

அதற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்ட தமிழக சட்ட அமைச்சகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களில் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அதனை சரிபார்த்த பின்னர் ஒன்றிய அரசுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவில் எழுந்துள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு சட்ட மசோதா ஒப்புதல் அளிக்க முடியாதென குடியரசு தலைவர் மாளிகையால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் தற்பொழுது நிறைவேற்றி அனுப்பி உள்ள மசோதாவில் விளக்கங்கள் கேட்டு கடிதம் வந்துள்ளது. இதுவே சற்று முன்னேற்றமான செயலாகவே கருதுகிறோம்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு படிப்படியாக முதலமைச்சர் காய் நகர்த்தி வெற்றி பெறுவார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் அடித்தட்டு மக்களில் இருந்து வந்துள்ளதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details