தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தயார் - Student Admissions Committee Secretary Selvarajan

சென்னை: மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் செல்வராஜன் தெரிவித்தார்.

selvaraj
selvaraj

By

Published : Nov 17, 2020, 7:36 PM IST

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் நாளை (நவ. 18) நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். அதன்படி, கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களும், பெற்றோர்களும் நோய்த் தொற்று ஏற்படாமல் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்பில் கல்லூரிகளிலுள்ள இடங்கள் விவரத்தை அறிந்துகொள்வதற்காக மாணவர்கள் காத்திருக்கும் அறை, எல்இடி ஸ்க்ரீன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் செல்வராஜன் கூறுகையில், "அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நாளை (நவ. 18) காலை 9 மணிக்கு தொடங்கி, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (நவ.19) சிறப்புப் பிரிவினருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும்.

இதன் பின்னர் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடத்தப்படும். இங்கு வருபவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஏற்பாடு தீவிரம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவதால் முதல் பத்து இடங்களைத் தேர்வுசெய்யும் மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்.

இதையும் படிங்க:”தேச நலனுக்கு எதிரான கூட்டணியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details