தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்க இன்றே கடைசிநாள் என்பதால், அரசியல் கட்சித்தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மத்திய சென்னை தொகுதி அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்கசாலையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவை டெபாசிட் இழக்க செய்வீர்களா...? - ஜெயலலிதா பாணியில் பிரேமலதா - admk alliance
சென்னை: மத்திய சென்னை தொகுதி அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சாம்பால் உழைப்பால் முன்னேறியவர். இவரை எதிர்த்துப் போட்டியிடும் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் எம்பி ஆக இருந்துள்ளார். அப்போது இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் அவர் செய்ததில்லை. மாறாக தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் வாழ்விற்கும் ஊழல்களை செய்துள்ளார். ஆனால், சாம்பால் முதல் முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார். இந்த தொகுதிக்கு ஏகப்பட்ட திட்டங்களை அவர் வைத்துள்ளார். எனவே, அவருக்கு வாக்களியுங்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனை 'கேடி பிரதர்ஸ்' என்றுதான் அழைப்பார். 'கே' என்பது அண்ணன் கலாநிதி மாறனும், 'டி' என்பது தம்பி தயாநிதி மாறனும் ஆவர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு உள்ளது. எனவே, மத்திய சென்னை வேட்பாளர் சாம்பாலை வெற்றி பெறச் செய்வீர்களா? மாம்பழம் சின்னத்தில் வெற்றி பெறச் செய்வீர்களா? ஊழல் கட்சியான திமுகவை டெபாசிட் இழக்க செய்வீர்களா? என ஜெயலலிதா பாணியில் கேட்டு வாக்கு சேகரித்தார்.