தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிகவில் குப்பைகள் கழிந்துவிட்டன, இருப்பவை அனைத்தும் முத்துக்கள் - பிரேமலதா - பிரேமலதா

4 மாவட்டங்களிலும் தேமுதிகவிற்கு சாதகமான தொகுதிகள் எவை, பூத் கமிட்டிகளை அமைப்பது , தேர்தல் கூட்டணி குறித்த பொறுப்பாளர்களின் கருத்துகள் இந்த கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.

Premalatha speech about election 2021
Premalatha speech about election 2021

By

Published : Jan 11, 2021, 5:48 PM IST

சென்னை: தேமுதிகவில் குப்பைகள் கழிந்துவிட்டன, இருப்பவை அனைத்தும் முத்துக்கள் என தேமுதிக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா பேசினார்.

தேமுதிக சார்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார்.

பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி 3 மணிவரை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என 75 பேர் பங்கேற்றனர்.

4 மாவட்டங்களிலும் தேமுதிகவிற்கு சாதகமான தொகுதிகள் எவை, பூத் கமிட்டிகளை அமைப்பது , தேர்தல் கூட்டணி குறித்த பொறுப்பாளர்களின் கருத்துகள் இந்த கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.

குறிப்பாக கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சென்னை மண்டலத்தில் வெற்றி பெற்றிருந்த 8 சட்டமன்றத் தொகுதிகளையும் மீண்டும் கேட்டுப் பெற வேண்டுமென நிர்வாகிகளில் சிலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தேமுதிகவினர் தேர்தல் பணியை தொடங்கிவிட்டோம். தேர்தல் வியூகம், பூத் கமிட்டி குறித்து இன்று ஆலோசனை நடத்தினோம். நிர்வாகிகளின் கருத்துப்படி தேமுதிகவினர் தேர்தல் வியூகம் அமைப்போம் என்றார்.

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் , விரைவில் பொதுக்குழு , செயற்குழுவை கூட்டி கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். தேமுதிகவில் குப்பைகள் கழிந்துவிட்டன, இருப்பவை அனைத்தும் முத்துக்கள். தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி , எங்களுக்கான சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம். அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெறுவோம் என ஒருதலைப்பட்சமாக இப்போது நான் கூற முடியாது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details