இது குறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (தடுப்பூசி) வினய், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. மே மாதம் 5ஆம் தேதி வரையில் 45 வயத்திற்கு மேற்பட்டவர்களில் 61 லட்சத்து 37 ஆயிரத்து 213 பேருக்கு போடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வேண்டாம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை: கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடலாம் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் கடிதத்தில், ஏற்கனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிப்புப் பணியின் போது, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு நடத்தப்படவில்லை என பாரத் பயோடெக் நிறுவனமும், சீரம் நிறுவனமும் தெரிவித்துள்ளது. எனவே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.