தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா 3ஆவது அலை - தயார் நிலையில் தமிழ்நாடு - corona 3rd wave

தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலை செப்டம்பர் மாதத்தில் உச்சம் அடைய வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கணிப்பு தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா 3ஆவது அலையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்
கரோனா 3ஆவது அலையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்

By

Published : Aug 3, 2021, 5:32 PM IST

Updated : Aug 3, 2021, 7:35 PM IST

சென்னை: உலக தாய்ப் பால் வார விழாவை முன்னிட்டு, இன்று சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலுட்டும் அறை, தாய்ப் பால் வங்கி ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனைகளிலும் பாலூட்டும் அறை மிக விரைவில் திறக்கப்படும்.

கரோனா 3ஆவது அலையை சமாளிக்க ஏற்பாடுகள் தயார்

கரோனா 3ஆவது அலை

மாநிலம் முழுவதும் 24 மாவட்டங்களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 12 தாய்ப்பால் வங்கியும், அடுத்தாண்டு 12 தாய்ப்பால் வங்கியும் தொடங்கப்பட உள்ளது.

செப்டம்பர் மாதம் மத்தியில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்பு உள்ளதாகவும், தினசரி 42,000 வரை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐஐடி கணிப்புத் தெரிவித்துள்ள நிலையில் மருத்துவ வல்லுநர்கள், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பூர்ணலிங்கம் தலைமையிலான ஆலோசனைக் குழு ஆகியோரிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, மூன்றாவது அலையை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உருமாறிய கரோனா வைரஸ் ஆய்வகம்

கரோனா எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும். தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்ளன. ஒன்றிய அரசு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.

உருமாறிய கரோனா வைரஸ் குறித்து கண்டறிய தமிழ்நாட்டில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வகம், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மற்றொரு ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.

இதுவரை 32 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பேருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈடில்லா ஞானத்தைத் தந்தார் குடியரசுத் தலைவர் - ஸ்டாலின் நெகிழ்ச்சி

Last Updated : Aug 3, 2021, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details