சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில், பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளும், பள்ளங்களும் மூடப்படாமல் இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் (பேரிகாட்) மற்றும் அடையாள பலகைகள் வைக்க வேண்டும்.