தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் காரில் கரோனா தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு - corona

சென்னை: அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, அன்பழகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மற்ற அமைச்சர்களுக்கும் தொற்று ஏற்படாத வகையில் அவர்களது காரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

saroja
saroja

By

Published : Jul 15, 2020, 5:22 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகமாக பரவிவருகிறது. இருப்பினும் தமிழ்நாடு அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. மேலும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கரோனா தொற்று அதிகமாக பரவிவருகிறது.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி, செல்லூர் ராஜூ, அன்பழகன் ஆகிய மூன்று பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று அமைச்சரின் கார் ஓட்டுனர்கள் மூலம் பரவும் அபாயம் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் சரோஜாவின் வாகனம்

இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமைச்சர் சரோஜா காரில் ஓட்டுனருக்கும், பின்னிருக்கையில் இருப்பவருக்கும் தொடர்பில்லாத வகையில் பிளாஸ்டிக்கால் ஆன பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்று விரைவில் அனைத்து அமைச்சர்களின் கார்களிலும் அமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details