சென்னை:வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், வடபழனி 100 அடி சாலை அரும்பாக்கம் அருகே முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
முதற்கட்டமாக வடபழனி 100 அடி சாலையில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் நேற்று(நவ.1) ஒரே நாள் இரவில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டு, சாலையில் 10 அடி பள்ளம் தோண்டி 'பிரி காஸ்ட்' முறையில் மழை நீர் வடிகால்வாய் பணிகளை போர்க்கால அடிப்படையில் கட்டமைத்தனர்.
மேலும், சாலையில் இருக்கும் மழை நீரை உயர் ரக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீரை உறிஞ்சி வடிகால் வாய் மூலம் அரும்பாக்கம் கால்வாய்க்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவில் மழை நீர் வடிகால்வாய் கட்டமைத்து, மழை நீரை அரும்பாக்கம் கால்வாயில் கொண்டு செல்ல செய்யப்பட்ட நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள், நெடுஞ்சாலைத்துறைக்குப் பாரட்டுகளைத்தெரிவித்தனர்.
ஒரே நாள் இரவில் 'பிரிகாஸ்ட்' முறையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பு இதையும் படிங்க: 'சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் நீர் வெளியேற்றப்படும்'