தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பள்ளி வாசல்களில் தொழுகை நேரத்தை நீடிக்க வேண்டும்’ - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை - ரம்ஜான் பண்டிகை

சென்னை: பள்ளி வாசல்களில் தொழுகை நேரத்தை நீடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

By

Published : Apr 10, 2021, 11:00 PM IST

ரம்ஜான் பண்டிகை வரும் மே 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி வாசல்களில் வழிபாட்டுத் தளங்களை இரவு 10 மணி வரை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிக்குக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “கரோனா தொற்று காரணமாக வழிபாட்டுத் தளங்கள் தற்போது இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் தொழுகையில் ஈடுபட பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை கூடுதலாக நேரம் வழங்க வேண்டும்.

தொழுகை நேரத்தை நீடிக்க வேண்டும்’

மேலும் வருகின்ற புதன், வியாழன் ஆகிய தேதிகளில் நோன்பு ஆரம்பிக்க இருப்பதினால் பள்ளிவாசலுக்கு அரசு சார்பாக வழங்கும் பச்சரிசியைத் தரமானதாக அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'அரக்கோணம் ரெட்டை கொலைக்கு பாமக கண்டன அறிக்கை விடலயே' - திருமாவளவன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details