தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரணாப் முகர்ஜியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளது - மருத்துவமனை - குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி

டெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலையில் இருந்தாலும், அவரது ரத்த ஓட்டம் சீராக உள்ளது என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Pranab Mukherjee continues to be in deep coma, on ventilator support
Pranab Mukherjee continues to be in deep coma, on ventilator support

By

Published : Aug 30, 2020, 3:01 PM IST

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் உள்ளிட்டவை தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பிரணாப் முகர்ஜி சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

அதில், "பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார். இருந்தபோதிலும், அவருக்கு ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு சீராக உள்ளது. அதனால், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருக்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details