இந்து நாளிதழ் செய்தியாளர் பிரதீப் குமார், கரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
29 வயது இந்து நாளிதழ் செய்தியாளர் கரோனாவுக்கு பலி - கரோனா
கரோனா வார்டிலிருந்து வீடு திரும்பிய பிறகு இந்து நாளிதழ் செய்தியாளர் பிரதீப் குமார் கரோனாவுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதே போல் தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர், செய்தியாளர் உள்ளிட்டோரும் உயிரிழந்த நிலையில், 29 வயதே நிரம்பிய பிரதீப் குமார் கரோனாவுக்கு பலியாகி உள்ளது துறை சார்ந்தவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகை மற்றும் ஊடகம் சார்ந்த நண்பர்கள் முன்னதாக முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அரசாணையை விரைந்து வெளியிட்டு, இதுவரை உயிரிழந்த பத்திரிகை துறையைச் சார்ந்த நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.