தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”இது சும்மா ட்ரைலர்தான்...மெயின் பிக்சர் இனிமேதான்” - நிவர் புயல் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் - வெதர்மேன் பிரதீப் ஜான்

சென்னை : நிவர் புயலால் நாம் எதிர்பார்த்ததைவிட சென்னையில் அதி தீவிர மழை பெய்யும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.

strom
strom

By

Published : Nov 24, 2020, 10:26 PM IST

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிவர் புயல், இன்று (நவ.24) புயலாக மாறியுள்ளது. தற்போது இப்புயல் சென்னையின் தென் கிழக்கே 430 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், நிவர் புயல் இன்னும் தீவிரமடையுமே தவிர பலவீனமடைய வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையைப் பொருத்தவரையில் இதுவரை எதிர்பார்க்காத வகையில் மழை பெய்யும். கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்யும். மற்ற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதேபோன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் காலை 8.30 மணிக்கு முன்பு 78 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதன் பின்பு 100 மி.மீ மழை பெய்திருந்தது.

வெதர்மேன் பிரதீப் ஜானின் ட்வீட்

ஆனால், நாளை காலை நுங்கம்பாக்கத்தில் 100 லிருந்து 200 மில்லி மீட்டர் அளவு மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை - அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details