சென்னை:மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள பராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜூன் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், குன்றத்தூர் மெயின் ரோடு, பெல் நகர், சத்திய ராயபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், தாம்பரம், கிண்டி, போரூர், அடையாறு, நீலாங்கரை, மயிலாப்பூர், கே.கே.நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அடையாறு மற்றும் நீலாங்கரை பகுதிகளில் கற்பகவிநாயகர் நகர், நாராயணன் நகர், சௌந்தர்யா தோட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மயிலாப்பூர் பகுதியில், கார் ரெம் சுபேதர் தெரு, பள்ளப்பான் தெரு மற்றும் பெசன்ட் சாலையின் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தாம்பரம் பகுதியில் பம்மல் மெயின் ரோடு, மசூரன் தெரு, பசும்பொன் நகர், ராதா நகர், புருசோத்தமன் நகர், பத்மநாப நகர், ஸ்ரீராம் நகர், கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோயில் தெரு, கிருஷ்ணசாமி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
தொடர்ந்து கே.கே.நகர் பகுதியில் சூளைமேடு, ராஜேஸ்வரி தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், பஜனை கோயில் தெரு, சின்மயா நகர், வளசரவாக்கம், கணபதி நகர், ஆழ்வார் திருநகர், ராதா நகர், விருகம்பாக்கம், காந்திகிராமம், காந்திநகர், சாலமேடு பகுதிகளிலும், எம்ஜிஆர் நகர், காமராஜர் தெரு, அழகிரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.