தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு - அதிமுக வெளிநடப்பு

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு பிரச்சனையை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக வெளிநடப்பு
அதிமுக வெளிநடப்பு

By

Published : Apr 22, 2022, 2:20 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்.22) கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மின்வெட்டு நீடிப்பதாக தெரிவித்தார். இதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்தார். எனினும் அமைச்சரின் பதிலுரை திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மின்வெட்டு பிரச்சனைக்கு நிலக்கரியை சரியான முறையில் கொள்முதல் செய்யதது தான் காரணம். மத்திய அரசிடம் இருந்து நிலக்கரியை கொள்முதல் செய்து கோடைகாலம் வரும் போது தேவையான மின்சாரத்தை கொடுக்க வேண்டும். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மின்வெட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தடையின்றி மின்சாரம் கொடுத்ததால், தொழிற்சாலைகள் வந்தன. தமிழ்நாட்டிற்கு தற்போது 17 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மின்வெட்டால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க:நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details