தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 2, 2021, 6:16 PM IST

ETV Bharat / state

சென்னையில் நள்ளிரவில் பல பகுதிகளில் பவர் கட் - பொதுமக்கள் கடும் அவதி

சென்னையில் நள்ளிரவில் பல பகுதிகளில் தொடர்ந்து மின் தடை பிரச்சினை ஏற்பட்டு வருவதால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் நள்ளிரவு பல பகுதிகளில் பவர் கட்-  பொதுமக்கள் கடும் அவதி
சென்னையில் நள்ளிரவு பல பகுதிகளில் பவர் கட்- பொதுமக்கள் கடும் அவதி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பல பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மின் தடை செய்யப்படுகிறது. குறிப்பாகக் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின் தடை செய்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், தேர்தல் நேரங்களில் இரவு பவர் கட் செய்யப்படுவது பணப்பட்டுவாடா செய்யவா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

மின்தடை பாதைகளில் செயற்கையாக மின்தடையை உருவாக்கி, செயற்கை மின்தடை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கவும், அதிமுக 3ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கவும் முயன்று வருகிறது.

இதனால் முன்கூட்டியே பணப்பட்டுவாடாவை முடித்துவிடக் கட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோடை காலத்தில் மின்தேவை உச்சபட்ச அளவை எட்டியுள்ளது. அதிக மின் தேவை உள்ள இடங்களில் மின்மாற்றி திடீரென பழுதாகி விடுகிறது.

தவிர்க்க முடியாத காரணத்தால் மின்தடை ஏற்படுகிறது. எந்தப் பகுதியிலும் திட்டமிட்டு மின்தடை ஏற்படவில்லை. அவ்வாறு மின் தடை ஏற்பட்டால், உடனே சரிசெய்யப்பட்டு விடும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பிரதமரே வாங்க; எங்களுக்கு ஆதரவு தாங்க!' - திமுக வேட்பாளர்கள் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details