தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பல பகுதிகளில் மின் தடை - chennai district news

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 21, 2023, 10:33 PM IST

சென்னையில் நாளை(பிப்.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெருங்களத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெருங்களத்தூரில் காந்தி ரோடு, என்.ஜி.ஓ. காலனி, பாரதி நகர், கல்கி தெரு, விவேக் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், தண்டையார்பேட்டையில் டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு ஒரு பகுதி, பால அருணாச்சலம் தெரு, நமச்சிவாயன் செட்டித்தெரு, கப்பல்போலு தெரு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை மறுநாள்(பிப்.23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம், போரூர், அம்பத்தூர், பெரம்பூர், கே.கே.நகர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லாவரத்தில் பாரதி நகர், துளுக்கானத்தம்மன் கோயில் தெரு, கபிலர் தெரு, வைத்தியர் தெரு மாடம்பாக்கம் திருவாஞ்சேரி வில்லேஜ், அகரம் மெயின் ரோடு, ஸ்ரீ சாய் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

போரூரில் மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், தரப்பாக்கம் சாலை, விசாலாட்சி நகர், லட்சுமி நகர் 40 அடி ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, டிரங்க் ரோடு, ஆர்.இ.நகர், கிருஷ்ணா நகர், குன்றத்தூர் மெயின் ரோடு ஒரு பகுதி, சந்தோஷ் நகர், முத்துமாரியம்மன் நகர், மங்களா நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, திருவீதியம்மன் கோயில் தெரு பகுதிகளிலும் பூந்தமல்லியில் டிரங்க் ரோடு, வைத்தீஸ்வரன் கோயில் தெரு, புது தெரு, நண்பர்கள் நகர், வசந்தபுரி, பெரியார் நகர், பவித்திர நகர், வி.ஜி.என் நகர், ஜீவா நகர் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருமுடிவாக்கத்தில் 5, 6 மற்றும் 14வது மெயின் ரோடு திருமுடிவாக்கம் சிட்கோ ஆகிய பகுதிகளிலும், கோவூரில் தண்டலம், மணிமேடு, தரபாக்கம், குன்றத்தூர் ஒரு பகுதி, ராம் நகர், சத்யா நகர் ஆகிய பகுதிகளிலும், செம்பரம்பாக்கத்தில் மேப்பூர், அகரமேல் ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் அம்பத்தூரில் டி.ஐ.சைக்கிள் எம்.டி.எச்.ரோடு, டீச்சர்ஸ் காலனி, எம்.கே.பி. நகர், சிவானந்தா நகர், அன்னை சத்யா நகர், வானகரம் ரோடு பகுதிகளிலும், பெரம்பூரில் ராஜீவ்காந்தி நகர் தெற்கு மாட வீதி, திரு.வி.க. 1 மற்றும் 2வது தெரு, நாராயண மேஸ்த்திரி 1 மற்றும் 2வது தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

கே.கே.நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, வளசரவாக்கம், சின்மயா நகர், 100 அடி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக சார்பில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details