தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு! - சென்னை மின்தடை பகுதிகள்

சென்னை: தலைநகர் சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி (நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

power
power

By

Published : Aug 31, 2020, 11:19 AM IST

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி (நாளை) அன்று காலை 09.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கொட்டிவாக்கம் பகுதி:

பத்திரிகையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர், கற்பகம்பாள் நகர், கல்யாணி தெரு, ராஜா தெரு, ராஜா தோட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலகம் முதல் பல்கலை நகர் ஆர்ச் வரை, வள்ளலார் நகர், ஸ்ரீனிவாசபுரம், நிஜாமா அவென்யூ, பாரதி அவென்யூ, காவேரி நகர் (1 முதல் 6 வரை), ஜெகநாதன் தெரு, பே வாட்ச் பபூல் வார்டு.

சோத்துபெரும்பேடு பகுதி:

பள்ளசூரப்பேடு, கணபதி அவென்யூ, காரனோடை, ஆத்தூர், பஸ்தபாளையம், தேவனேரி ஆகிய இடங்களில் மேற்கண்ட குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details