தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்! - power cut areas in chennai announced

சென்னை: நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

power cut areas in chennai announced
power cut areas in chennai announced

By

Published : Aug 9, 2020, 2:55 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'சென்னையில் நாளை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக, கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். நண்பகல் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வி.ஜி.பி. லேவுட் பகுதி-1, உத்தண்டி கிராமம், ரகுவரன் சாலை, சீனிவாச அவென்யூ, அடையாறு சின்னமலைப் பகுதியில் உள்ள ரங்கராஜபுரம், ஸ்ரீநகர் காலனி, தெற்கு அவென்யூ, வடக்கு மாடத் தெரு, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் மின் தடை ஏற்படும்.

வேளச்சேரி மேற்கு பகுதியில் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலைப் பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

வேளச்சேரி கிழக்கு மற்றும் மையப் பகுதியில் உள்ள பிரதான சாலைப் பகுதி, 100 அடி புறவழிச்சாலையின் பிரதானப் பகுதி, தாண்டீஸ்வரம் காலனி, திரெளபதியம்மன் கோயில் தெரு, லஷ்மிபுரம், ஜனாகிபுரி தெரு, காந்தி சாலை, கிழக்கு மாதா தெரு, சீதாபதி நகர், ஜெயந்தி தெரு, ரவி தெரு, சாந்தி தெரு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்: 'அமைச்சர் விளக்கமளிப்பாரா?' - ஸ்டாலின் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details