அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
சென்னையில் 08.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருவாய்கண்டிகை பகுதி: திருவாய்கண்டிகை, கரடிபுத்தூர், ஜி.ஆர். கண்டிகை, கன்னக்கோட்டை, போலனூர், பெரியபுலியூர்.
திருமுல்லைவாயில் பகுதி: வள்ளிவேலன் நகர், ஜெயலட்சமி நகர், பொத்தூர் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம்.
சைதாப்பேட்டை பகுதி: வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம்.