தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொல்லை வழக்கு - சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனு ஒத்திவைப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனு ஒத்திவைப்பு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மனு ஒத்திவைப்பு

By

Published : Oct 20, 2021, 7:31 PM IST

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி மீது புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, 1 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பாலியல் தொல்லை வழக்கு

இந்நிலையில் குற்றச் சம்பவம் பயணத்தின் போது நடந்துள்ளதாகக் கூறப்படுவதால், வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றங்களில் தான் விசாரிக்க வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை என்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சிபிசிஐடி வழக்குகளை விசாரிக்க அதிகாரமுள்ளதாக விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்பு டிஜிபி மனு ஒத்திவைப்பு

இந்த உத்தரவை ரத்து செய்து, வழக்கை செங்கல்பட்டு அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அதுவரை விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details