சென்னை:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களில் மாணவர்கள் எண்ணிக்கைக்கும் அதிகமாக உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பாடவேளை இல்லாவிட்டால் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என கூறுகின்றனர். மாணவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் கணக்கெடுக்கப்பட்டு, உபரியா உள்ளவர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை 22.5.2023 நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, 'முதுகலை ஆசிரியர்கள் போதிய பாடவேளை இல்லாததால் கீழ் வகுப்புகளுக்கு இறக்கம் செய்யப்பட்டதால் பல்வேறு பள்ளிகளில பட்டதாரி ஆசிரியர்களே குறிப்பிட்ட பாடத்திற்கு இல்லாத சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே தெரிவித்தபடி 150 க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 6 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கி, மொத்தம் ஆறு பட்டதாரி பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.