தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராம்குமார் மரண வழக்கு டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ராம்குமார் மரண வழக்கில் சிறை மருத்துவர், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கறிஞர் ஜான்சன்
வழக்கறிஞர் ஜான்சன்

By

Published : Nov 23, 2021, 7:58 PM IST

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சாப்ட்வேர் என்ஜினியரான ஸ்வாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், வரும் வழியில் ஆம்புலன்ஸில் இறந்துவிட்டதாகவும் காவல்துறையால் கூறப்பட்டது. ராம்குமாரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சிறைத்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்தனர்.

ராம்குமார் மரண வழக்கு

இந்நிலையில் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ராம்குமாரை பரிசோதித்த சிறைத்துறை மருத்துவர் நவீன்குமார், உடற்கூராய்வு செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம், சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், சிறைக் காவலர் ஜெயராமன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராம்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயமாக ராம்குமார் மரணத்தில் நீதி கிடைக்கும்.

வழக்கறிஞர் ஜான்சன்

டிசம்பர்7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ராம்குமார் ஆம்புலன்சில் வரும் வழியில் இறந்துவிட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில், சிறை மருத்துவர் நவீன்குமார் சிறையிலேயே இறந்துவிட்டதாக சான்று அளிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராம்குமார் உடலைப் உடற்கூராய்வு செய்த மருத்துவரான பாலசுப்பிரமணியம் மின்சார தாக்கியும் இறந்திருக்கலாம் என தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்பட்ட ஒயரில் எந்த வித தடயமும் கிடைக்கவில்லை என தடயவியல் நிபுணர்கள் சான்று அளித்துள்ளனர். இந்த ஆவணங்களை வைத்து பார்க்கையில் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என 99 விழுக்காடு கூறலாம்" என்றார்.

இதையும் படிங்க:Rajini calls on Kamal: கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details