தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி-கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு? - முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்கலாமா என அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மாணக்கரின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளி-கல்லூரிகள் திறப்பு என்பதை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

பள்ளி-கல்லூரிகள் திறப்பு
பள்ளி-கல்லூரிகள் திறப்பு

By

Published : Aug 30, 2021, 1:40 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்துவந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகள் சுகாதார முறையில் பள்ளிகளில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி-கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கையான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரம், காவல் ஆகிய துறைகளின் அலுவலர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில், மாணக்கரின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு பள்ளி-கல்லூரிகள் திறப்பு என்பதைத் தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கரோனா பாதிப்பு ஒருபுறமிருக்க எவ்வாறு தேர்தலை நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி-கல்லூரிகள் திறப்பு தொடர்பான முதலமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன்கருதியே முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: புதிய ட்ரோன் விதிகள் 2021: வணிக செயல்பாடுகளின் புதிய நம்பிக்கை

ABOUT THE AUTHOR

...view details